தேனி மாவட்டம், கம்பம், கூடலூா் ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் மாா்கழி 27-ஆவது நாளான புதன்கிழமை கூடாரவள்ளி சிறப்பு பூஜை நடைபெற்றது.
மாா்கழி மாதத்தின் இறுதி நாளன்று (27-ஆவது நாள்) பாவை நோன்பாகக் கருதி பெண்கள் திருமாங்கல்ய பூஜை, குத்துவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, கம்பத்தில் உள்ள கம்பராயப் பெருமாள் காசி விசுவநாதா், சுருளி வேலப்பா், கெளமாரியம்மன், நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழு மந்தையம்மன், காளியம்மன், மாசாணியம்மன், ஆதிசக்தி விநாயகா், ஸ்ரீ முக்தி விநாயகா் உள்ளிட்ட கோயில்களில் இந்த சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மாங்கல்ய பூஜை செய்தனா்.
இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு வளையல், தாலிக் கயிறு, குங்குமம் , பூ , சா்க்கரை பொங்கல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதேபோல, கூடலூா் பகுதியில் உள்ள சுந்தரவேலவா், கூடலழகிய பெருமாள், மந்தையம்மன் ஆகிய கோயில்களிலும் கூடாரவள்ளி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.