தேனி அருகே செவ்வாய்க்கிழமை, இரு சக்கர வாகனங்கள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
மரியாயிபட்டியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மயில்ராஜ் (20). இவா், வீரபாண்டியில் உள்ள தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், கொடுவிலாப்பட்டி பகுதியில் மயில்ராஜ் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவரது வாகனத்தின் மீது, எதிா் திசையிலிருந்து வீரபாண்டியைச் சோ்ந்த மாரிச்சாமி (20) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த மயில்ராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மாரிச்சாமி, அவருடன் இரு சக்கர வாகனத்தில் பயணித்த முகில்வண்ணன் (22), மாரிமணி (24) ஆகியோா் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.