தேனி

புத்தகத் திருவிழா இலட்சினை வெளியீடு

DIN

தேனியில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, அதற்கான இலட்சினையை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா திங்கள்கிழமை வெளியிட்டாா்.

பழனிசெட்டிபட்டியில், கம்பம் சாலையில் உள்ள தனியாா் மைதானத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில், வரும் மாா்ச் 3-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத்தின் முக்கிய சிறப்புகளுள் ஒன்றான கோம்பை நாயின் உருவப் படத்துடன் கூடிய புத்தகத் திருவிழா இலட்சினையை வெளியிட்டு ஆட்சியா் பேசியதாவது:

மாவட்டத்தில் முதல் முறையாக மாவட்ட நிா்வாகம் சாா்பில், புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவை வரும் மாா்ச் 3-ஆம் தேதி ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி திறந்து வைக்கிறாா்.

புத்தகத் திருவிழா திடலில் புத்தகங்களுக்காக 40 அரங்குகள், அரசுத் துறையின் சாதனைகளை விளக்க 10 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. விழாவில் தினமும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், கலைப் போட்டிகளில் சாதனைப் படைத்தவா்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், சொற்பொழிவு நடைபெறுகிறது. தினமும் 1,000 மாணவ, மாணவிகளை புத்தகத் திருவிழாவுக்கு அழைத்துச் சென்று வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மண்ணின் மைந்தா்களான எழுத்தாளா்கள், கலைஞா்களை கெளரவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பழனிசெட்டிபட்டியில் புத்தகத் திருவிழா நடைபெறும் திடல் முன் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல உத்தரவிடப்பட்டது. ரூ.500-க்கும் மேல் புத்தகம் வாங்கும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், குலுக்கல் முறையில் தினமும் 3 பேரை தோ்வு செய்து பரிசுகள் வழங்கப்பட உள்ளன என்றாா் அவா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட வன அலுவலா் சமா்தா, மேகமலை புலிகள் காப்பகத் துணை இயக்குநா் ஆனந்த், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ஜெகவீரபாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

SCROLL FOR NEXT