தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாரின் பதவிக் காலத்தை மேலும் 10 மாதங்கள் நீட்டித்து தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையராக 2021 மே மாதம் பழனிக்குமாா் நியமனம் செய்யப்பட்டாா்.
இவரது பதவிக்காலம் 31.5.2023-இல் நிறைவடைகிறது. இந்நிலையில் இவரது பதவிக்காலத்தை மேலும் 10 மாதங்கள், அதாவது 9.3. 2024 வரை நீட்டித்து ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவிட்டுள்ளாா்.
இதற்கான அறிவிப்பு முறைப்படி மாநில அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பழனிக்குமாா் தனது பதவிக் காலத்தில் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த நகா்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்தியுள்ளாா்.