தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் இரண்டு புதிய ‘டாக்ஸிவேக்கள்’ தொடக்கம்

19th May 2023 07:01 AM

ADVERTISEMENT

சென்னை விமான நிலையத்தில் இரண்டு புதிய டாக்ஸிவேக்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை விமான நிலையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி :

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வேகமாக வெளியேறும் வகையில் 2 டாக்ஸிவேக்களை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

டாக்ஸிவே என்பது விமான நிலையத்தின் ஒருபகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும் இடையே ஒரு இணைப்பை வழங்குவதாகும். இந்த டாக்ஸிவேக்கள் மூலம் நெரிசல் மிக்க நேரங்களில் விமானங்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் இயக்க முடியும்.

ADVERTISEMENT

இதன் மூலம் விமான நிலையத்தின் கையாளும் திறன் தற்போது ஒரு மணி நேரத்தில் 36 இயக்கங்களிலிருந்து 45-ஆக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT