தமிழ்நாடு

மெரினாவில் மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி: ஆகஸ்ட்டில் தொடக்கம்

18th May 2023 08:42 PM

ADVERTISEMENT


சென்னை மெரினாவில் மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் ஒன்று கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரையிலான வழித்தடம் ஆகும். இது 26.1 கி.மீ. தொலைவுக்கு அமையவுள்ளது.

சுரங்கம் தோண்டும் நவீன இயந்திரத்தின் சோதனை முயற்சி நிறைவடைந்துள்ளது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரைசுரங்கப் பாதையாகவும், பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டப் பாதையாகவும் அமையும். உயர்மட்டப் பாதை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுரங்கப்பாதை பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதன் ஒரு பகுதியாக, கலங்கரை விளக்கம் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடையசுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT