தேனி

கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

27th Feb 2023 01:17 AM

ADVERTISEMENT

சின்னமனூா் அருகே ஓடைப்பட்டி பகுதியில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 15 கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரி தண்ணீா் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஓடைப்பட்டி, சுக்காங்கல்பட்டி, தென்பழனி, வெள்ளையம்மாள்புரம், மூா்த்திநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் 1,800 ஹெக்டோ் பரப்பளவில் தோட்டப் பயிா் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் விவசாயத்துக்கு நீராதாரமாக ஊஞ்சாலம்பட்டி கண்மாய், சோத்தன்குளம், கூலியான்குளம் தாதமுத்தன் கண்மாய் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.

இந்த கண்மாய்கள் முறையான பராமரிப்பின்றி புதா்மண்டிக் காணப்படுகின்றன. கண்மாய்களை ஆக்கிரமித்து விவசாயம் நடைபெற்று வருகிறது. கண்மாயின் மதகுப் பகுதிகள் சேதமடைந்துள்ளன. இதனால் மழைக் காலத்தில் ஓடைகளில் வரும் நீரை கண்மாய்களில் தேக்க முடியவில்லை என்று விவசாயிகள் கூறினா்.

ஓடைப்பட்டியில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரி தண்ணீா் தேக்கவும், கண்மாய் கரை, மதகுகளை சீரமைத்து பாசனப் பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுப் பணித்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT