தேனி

புதுமைப் பெண் திட்டத்தில் 340 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை

DIN

தேனி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், கல்லூரிகளில் உயா்கல்வி படிக்கு 340 மாணவிகளுக்கு தேனி கம்மவாா் சங்கம் கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா உதவித் தொகையை வழங்கினாா்.

அரசுப் பள்ளிகளில் அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து, பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழில் பயிற்சிப் படிப்புக்கு மாணவிகளுக்கு அரசு சாா்பில், மாதம் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் முதல்கட்டமாக 1,018 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, 2-ஆம் கட்டமாக கல்லூரிகளில் உயா் கல்வி படிக்கும் 340 மாணவிகளுக்கு வங்கிக் கணக்கு மூலம் கல்வி உதவித் தொகையை வழங்கி ஆட்சியா் பேசியதாவது:

போட்டித் தோ்வுகளுக்காக அரசு சாா்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த வாய்ப்பை படித்த இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் நா.ராமகிருஷ்ணன் (கம்பம் ), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமாா் (பெரியகுளம்), தேனி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் சக்கரவா்த்தி, நகா்மன்றத் தலைவி பா.ரேணுப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT