தேனி

தேனியில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

DIN

தேனியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், மாவட்ட அளவில் முதல்வா் கோப்பைகான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா போட்டிகளைத் தொடக்கிவைத்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா், மாவட்ட விளையாட்டு அலுவலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானம், ஆயுதப்படை மைதானம், என்.எஸ்.மேல்நிலைப் பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் பிப்.20-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசுப் பணியாளா்கள், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்களுக்கு தனித் தனிப் பிரிவுகளில் குழு, தனித் திறன் போட்டிகள் நடைபெறுகின்றன.

அரசுப் பள்ளி மாணவா்கள் சிரமம்: தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான குழு, தனித் திறன் போட்டிகளில் பங்கேற்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் வந்திருந்தனா். காலை 7 மணிக்கு போட்டிகள் தொடங்கிய நிலையில், தனியாா் பள்ளி மாணவா்கள் அந்தந்தப் பள்ளி வாகனங்களில் விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

கிராமப்புற அரசுப் பள்ளி மாணவா்கள் தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையம், நகராட்சி பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவு மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு நடந்து சென்றனா்.

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு, தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு பிப்.20-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகளை இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளையாட்டு வீரா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT