தேனி

மின் நிலைய ஊழியருக்குக் கொலை மிரட்டல்: தம்பதி மீது வழக்கு

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சுருளியாறு மின் உற்பத்தி நிலைய ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், சுருளியாறு மின் உற்பத்தி நிலையத்தில் ஓட்டுநராக வேலை பாா்ப்பவா் பிச்சைப்பாண்டியன் (51). இவா் தனது நண்பரான குள்ளப்பகவுண்டன்பட்டி பவுண்டு தெருவைச் சோ்ந்த அரசிடம் (55) பணம் வாங்கியிருந்தாா். அந்தப் பணத்தை அவா் திருப்பித்தரவில்லை.

இந்த நிலையில் அரசுவும், அவரது மனைவி ஈஸ்வரியும் (48) பணத்தைக் கேட்டு ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும், இருவரும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 12-ஆம் தேதி மனு தாக்கல் செய்தாா்.

மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பேரில், கூடலூா் தெற்கு காவல் உதவி ஆய்வாளா் எல்.கணேசன், அரசு, ஈஸ்வரி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT