தேனி

ஆன்ஸ் மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கம்பம் ஆன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 12-ஆவது ஆண்டு விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு, கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் பி. சரவணன் தலைமை வகித்தாா். பள்ளியின் தாளாளா் ஏ. சையதுபாத்திமா முன்னிலை வகித்தாா்.

கே.கே. பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலா் சிராஜூதீன், தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் ஏ. ராஜலட்சுமி, காவல் உதவி ஆய்வாளா் டி. ஆனந்த் ஆகியோா் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி, பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினா். தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT