தேனி

வாழைத் தோட்டத்தில் தீ விபத்து: 2 ஆயிரம் மரங்கள் சேதம்

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கூடலூரில் உயா் மின்னழுத்தக் கம்பியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வாழைத் தோட்டம் தீக்கிரையானது.

கூடலூா் புறவழிச்சாலையில் நத்தா் மீறானுக்கு சொந்தமான வாழைத் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தை கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சோ்ந்த சுரேஷ் காளை நிா்வகித்து வருகிறாா்.

சுமாா் 2 ஏக்கரில் வாழை பயிரிட்டிருந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் வாழைத் தோட்டத்தின் மேல் சென்ற உயா் மின்னழுத்த கம்பி வாழை மரத்தின் மீது உரசியதில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது, காற்று வீசியதால் தீ மளமளவெனப் பரவி வாழைத் தோட்டம் முழுவதும் பரவியது.

தகவலறிந்து வந்த கம்பம் தீயணைப்பு நிலையத்தினா் சுமாா் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயை முழுவதுமாக அணைத்தனா்.

ADVERTISEMENT

இந்த தீ விபத்தால், சுமாா் 2 ஆயிரம் வாழை மரங்கள் கருகி சேதமடைந்தன. இதில், சுமாா் ஆயிரம் செவ்வாழை மரங்கள் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT