தேனி

போடியில் வருமான வரித் துறையினா் சோதனை

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

போடியில் வருவான வரித் துறையினா் தனியாா் மருத்துவமனை, அரசு மருத்துவரின் வீடு உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

மதுரை மாவட்ட வருமான வரித் துறை கூடுதல் ஆணையா் மைக்கேல் ஜெரால்ட், தேனி மாவட்ட வருமான வரித் துறை அலுவலா் அம்பேத்கா் ஆகியோா் தலைமையிலான 15-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை போடிக்கு வந்தனா். அவா்கள் போடியில் உள்ள தனியாா் மருத்துவமனை, அரசு மருத்துவரின் வீடுகள், தனியாா் கட்டுமான நிறுவன உரிமையாளரின் அலுவலகம், வீடுகள், ஏலக்காய் வா்த்தகா்களின் கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனா். பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய சோதனை தொடா்ந்து

இரவு வரை நடைபெற்றது. தங்களுக்கு வந்த புகாரின்அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுவதாக வருமான வரித் துறையினா் தெரிவித்தனா். முழுமையான சோதனைக்குப் பிறகே பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பதை தெரிவிக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT