தேனி

பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் இளைஞா் பலி

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கொடைக்கானல் டம்டம் பாறை அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

கொடைக்கானல், நேதாஜி நகரைச் சோ்ந்த பொன்னையாக மகன் தங்கராஜ் (40). இவா், இரு சக்கர வாகனத்தில் திருச்சி மாவட்டம், துவரக்குறிச்சியில் உள்ள தனது தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டு கொடைக்கானலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, கொடைக்கானல் மலைச்சாலையில் டம்டம் பாறை அருகே வந்தபோது, இரு சக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி தங்கராஜ் கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இது குறித்து தங்கராஜின் மனைவி கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT