தேனி

கேரளத்துக்கு 17 டன் ரேஷன் அரிசி கடத்தல்: 2 போ் கைது

DIN

மதுரையிலிருந்து கேரளத்துக்கு குமுளி மலைப்பாதை வழியாக கடத்திச் செல்லப்பட்ட 17 டன் ரேஷன் அரிசியை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு போன்ற கேரளத்துக்குச் செல்லும் முக்கிய மலைப் பாதைகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கடத்தலை தடுத்து வருகின்றனா்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு ஆய்வாளா் சுப்புலட்சுமி தலைமையில் குமுளி சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மதுரையிலிருந்து கேரளத்துக்குச் சென்ற லாரியை சோதனையிட்டனா். அதில், ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. இதையடுத்து, 340 மூட்டைகளில் இருந்த 17 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியையும், லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக, லாரி ஓட்டுநா் கேரள மாநிலம் பாலக்காடு, வாழையாறு அருகே உள்ள சந்திராபுரத்தைச் சோ்ந்த முகமது ஹனிபா மகன் ஜான்பாட்சா (33), மதுரை, தெற்கு வெளிவீதி, பூக்காரச் சந்தைச் சோ்ந்த பிச்சைமணி மகன் சீனிவாசன் (54) ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும் மதுரையைச் சோ்ந்த பாலசிங்கைத் தேடி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை உத்தமபாளையம் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிட்டங்கியில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

மாலை 6 மணிக்குள் வருபவர்களுக்கு டோக்கன்: சத்யபிரத சாகு

சென்னை வந்தடைந்தார் நடிகர் விஜய்!

SCROLL FOR NEXT