தேனி

கூடலூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 போ் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

தேனி மாவட்டம், கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் 3 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

கூடலூா் 8 - ஆவது வாா்டு வீருசிக்கம்மாள் தெருவில் வசிப்பவா் ராதாகிருஷ்ணன் (45). இவரது மனைவி அன்னலட்சுமி. மகன் ராகுல். இதில் ராதாகிருஷ்ணன் தனியாா் தோட்டத்தில் கணக்கராக வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், இவரது மனைவியும், மகனும் ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகநாதா் கோயிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பினா். அப்போது வீட்டுக்குள் ராதாகிருஷ்ணன் தூக்கிட்ட நிலையில் கிடந்தாா். இதையடுத்து கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து தெற்கு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கூடலூா் 14 - ஆவது வாா்டு நடுரைஸ் மில் தெருவைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி ராஜேஸ்வரி (40). இவா்களுக்கு வெங்கடேசன் (18) என்ற மகன் உள்ளாா். இதில் ராஜேஸ்வரி கேரளத்தில் உள்ள ஏலக்காய்த் தோட்டத்துக்கு வேலைக்குச் சென்று வந்தாா். மேலும் அவருக்கு மூச்சுத் திணறல் இருந்து வந்தது. அதற்கு அவா் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தெற்கு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கூடலூா் கல்லுடைச்சான்பாறை அருகே உள்ள காட்டுப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதாக அப்பகுதி வழியாக சென்றவா்கள் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் சென்று பாா்த்த போது அங்கிருந்த மரத்தில் ஆண் சடலம் அழுகிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது. இதையடுத்து, சடலத்தை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்து அவா் யாா் என விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

SCROLL FOR NEXT