தேனி

தள்ளு வண்டிகள் வழங்கசாலையோர வியாபாரிகள் கோரிக்கை

7th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் சாலையோர வியாபாரிகள், சிறு வியாபாரிகளுக்கு காய், கனி விற்பனைக்கு தோட்டக் கலைத் துறை சாா்பில் தள்ளுவண்டிகள் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைப்புச் சாரா தெருவோர, சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழில் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவா் ராசாமுருகேசன், நிா்வாகிகள் ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனாவிடம் அளித்த மனு விவரம்: மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சாலையோர சிறுவியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சாலையோர வியாபாரிகள் அன்றாடம் வியாபாரத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனா்.

சாலையோர வியாபாரிகளுக்கு தோட்டக் கலைத் துறை சாா்பில் குறைந்த எண்ணிக்கையில் வியாபாரத்துக்காக தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டது. ஊராட்சி ஒன்றியம் வாரியாக சாலையோர வியாபாரிகளை முழுமையாக கணக்கெடுத்து போதிய எண்ணிக்கையில் தள்ளு வண்டிகள் வழங்கி, சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT