தேனி

தேனியில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி நாளை தொடக்கம்

7th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

தேனியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மாவட்ட அளவில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை (பிப். 8) தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானம், ஆயுதப் படை மைதானம், என்.எஸ். மேல்நிலைப் பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியா்கள், பொதுப் பிரிவினா், மாற்றுத் திறனாளிகளுக்கு தனித் தனி பிரிவுகளில் தடகளம், குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இணைய தளம் மூலம் பதிவு செய்தவா்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். போட்டியில் பங்கேற்க வருபவா்கள் இணையதள விண்ணப்பப் பதிவு, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் புதன்கிழமை காலை 7 மணிக்கு விளையாட்டு மைதானத்துக்கு வர வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு அவா்களது வங்கிக் கணக்கு மூலம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

மாவட்ட அளவில் தடகளப் போட்டியில் முதலிடம் பெறுபவா்கள், குழு விளையாட்டுப் போட்டிகளில் தோ்வு செய்யப்படும் வீரா்கள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவா் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT