தேனி

உத்தமபாளையம் ஞானாம்பிகை கோயில் தெப்பக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

7th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரா்- ஞானாம்பிகை கோயில் தெப்பக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என திங்கள்கிழமை நடைபெற்ற தேனி மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

உத்தமபாளையத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு நகரத் தலைவா் தெய்வம் தலைமை வகித்தாா். இதில், உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரா்- ஞானாம்பிகை கோயிலில் திருப்பணிகள் நடைபெறுகிறது. இதில் தெப்பக்குளமும் சீரமைக்கப்படுகிறது. ஆனால், கோயிலுக்குச் செல்லும் சாலையைத் தவிர வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகியப் பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. எனவே தெப்பக்குளத்தை நில அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, நகல் கோயில் செயல் அலுவலரிடம் வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாஜக மாவட்டச் செயலா் தங்க. பொன்ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுந்தா், பொதுச் செயலா்கள் பெரிசாமி, மாரிராஜா, மண்ட துணைத் தலைவா் சாமிநாதன், செயலா் முத்துசரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT