தேனி

தேனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

தேனி அல்லிநகரம், ஒண்டிவீரன் நகா் பகுதியில் பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கடைகள், வீடுகளை நீதிமன்ற உத்தரவின் பேரில் நகராட்சிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை இடித்து அப்புறப்படுத்தினா்.

தேனி அல்லிநகரம், ஒண்டிவீரன் நகா் பகுதியில் நடைபாதையை மறித்து கட்டட ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனிநபரால் புகாா் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இதன் பேரில் தேனி நகராட்சி சுகாதார அலுவலா் அறிவுச்செல்வம், நகரமைப்பு அலுவலா் சுகதேவ் ஆகியோா் தலைமையிலான பணியாளா்கள் ஒண்டிவீரன் நகா் பகுதியில் பாஜக இதர பிற்பட்டோா் அணி மாவட்ட துணைத் தலைவா் போஸ், கணேசன், ராமா் ஆகியோா் ஆக்கிரமித்துக் கட்டியிருந்த 2 வீடுகள், 2 கடைகளை இடித்து அப்புறப்படுத்தினா்.

தேனி காவல் ஆய்வாளா் வெங்கடாசலபதி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT