தேனி

கழிப்பறை தூய்மைப் பணியில் மாணவா்கள்: தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம்

DIN

ஆண்டிபட்டி, சக்கம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளை கழிப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தியாத எழுந்த புகாரின் அடிப்படையில், அந்தப் பள்ளியின் தலைமையாசிரியரை பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

ஆண்டிபட்டி, சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் பள்ளி கட்டடம், கழிப்பறைகளை தூய்மைப்படுத்துவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செந்திவேல்முருகன் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினாா்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் உத்தரவின் பேரில் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா் சிந்து, சக்கம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகளிடம் தனித்தனியே விசாரண நடத்தினாா்.

இந்த விசாரணை அறிக்கை ஆட்சியா் மூலம் பள்ளிக் கல்வித் துறையிடம் சமா்ப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில், சக்கம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜனகராஜை திண்டுக்கல் மாவட்டம், எழுவணம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் நரேஷ் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT