தேனி

போடி சிவன் கோவில்களில் பிரதோச பூஜை

4th Feb 2023 12:35 AM

ADVERTISEMENT

போடியில் வெள்ளிக்கிழமை பிரதோச தினத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை பிரதோச தினத்தை முன்னிட்டு போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவலிங்கப் பெருமானுக்கு மங்கல பொருட்களால் திருமஞ்சன அபிசேகம் நடத்தப்பட்டது. பின்னா் அலங்காரம் செய்யப்பட்டு ஏழு வகையான தீபாராதணைகள் நடத்தப்பட்டன.

பிரதோச வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். போடி பரமசிவன் மலைக்கோவிலில் நடைபெற்ற பிரதோச பூஜையில் சிவலிங்க பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், விபூதி, இளநீா், பால், தயிா், தேன், பன்னீா் உள்ளிட்ட மங்கல பொருட்களால் அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதணை நடைபெற்றது.

போடி பிச்சங்கரை மலை கிராமத்தில் உள்ள கீழச்சொக்கையா கோவிலில் நடைபெற்ற பிரதோச பூஜையில் சிவலிங்க பெருமானுக்கு வண்ண மலா்களாலும், உத்திராட்சங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. போடி பழைய பேருந்து நிறுத்தம் கொண்டரங்கி மல்லையசாமி திருக்கோவிலில் நடைபெற்ற பூஜையில் சிவலிங்க பெருமானுக்கு உத்திராட்சங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

ADVERTISEMENT

பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்று வழிபட்டனா். போடி எஸ்.எஸ்.புரம் சிவன் பாா்வதி திருக்கோவில், போடி சுப்பிரமணியசாமி கோவிலில் உள்ள நடராஜா் சன்னதி உள்ளிட்ட கோவில்களிலும் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT