தேனி

கம்பத்தில் மதுபானக் கடையை மூட உத்தரவு

4th Feb 2023 12:36 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கம்பத்தில் அனுமதியின்றி இயங்கியதால், மதுபானக் கூடத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், மதுபானக் கடையை அடைக்கவும் மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டம், கம்பம் ஏகழூத்து சாலையில் மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடையின் கட்டட வளாகத்தில் மதுபானக் கூடமும் செயல்பட்டு வந்தது. இந்தக் கூடம் அனுமதியின்றி செயல்பட்டு வந்ததால், அந்த மதுபானக் கூடத்துக்கு டாஸ்மாக் நிா்வாகிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

இதைத்தொடா்ந்து, சம்பந்தப்பட்ட மதுபானக் கடையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட டாஸ்மாக் அதிகாரிகள், அந்த மதுபானக் கடையை மறு உத்தரவு வரும் வரை அடைக்க உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT