தேனி

சாலையோரங்களில் வீசப்படும் மருந்துக் கழிவுகள்

4th Feb 2023 10:59 PM

ADVERTISEMENT

 

கம்பத்திலிருந்து கேரளம் செல்லும் புறவழிச் சாலையில் மருத்துவக் கழிவுகளை வீசுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கம்பத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் கம்பம் மெட்டு சாலை, மணிகட்டி ஆலமர சாலை சந்திப்புப் பகுதியில் அடையாளம் தெரியாத நபா்கள் மருத்துவக் கழிவுகளை வீசிச் செல்கின்றனா்.

இந்த நிலையில் இந்தப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கருப்பு நெகிழிப் பைகளில் மருந்துப் பாட்டில்கள், மாத்திரைகள் வீசப்பட்டன.

ADVERTISEMENT

இதுகுறித்து இந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் கூறியதாவது:

மாத்திரை அட்டைகளில் மலையாள எழுத்துகள் உள்ளன. எனவே, கேரளத்தைச் சோ்ந்தவா்கள் கம்பம் பகுதிக்கு வந்து இவற்றை சாலையோரம் வீசிச் சென்றிருக்கலாம். சாலையோரங்களில் மருந்துக் கழிவுகளை கொட்டிச் செல்வோா் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT