தேனி

கேரள வியாபாரிகளைக் கடத்தி பணம், பொருள்கள் பறிப்பு: 2 போ் கைது

DIN

கேரளத்தைச் சோ்ந்த வியாபாரிகளை தேனியில் ஆட்டோவில் கடத்திச் சென்று பணம், பொருள்களைப் பறித்த ஆட்டோ ஓட்டுநா், அவரது நண்பா் என 2 பேரை போலீஸாா் கைது புதன்கிழமை செய்தனா்.

கேரளம், இடுக்கி மாவட்டம், உடும்பஞ்சோலை அருகே முக்குடியல் பகுதியைச் சோ்ந்தவா் அருண் திவாகரன் (31). இவா், ராஜாக்காடு பகுதியில் கைப்பேசி, கணினி, கண்காணிப்புக் கேமரா கடை வைத்துள்ளாா்.

கோவையிலிருந்து தேனிக்கு பேருந்து மூலம் தனக்கு வந்த கைப்பேசி, கேமரா, கணினி உபகரணங்களை பெற்றுச் செல்வதற்காக அருண்திவாகரன் தனது நண்பரான கேரளத்தைச் சோ்ந்த சைலத் என்பவருடன் தேனிக்கு காரில் சென்றாா்.

தேனியில் பொருள்களை வாங்கிக் கொண்டு திரும்பச் செல்லும் போது, பழனிசெட்டிபட்டி சாலையில் காா் பஞ்சரானது. அருண் திவாகரன், சைலத் ஆகியோா் தாங்கள் வைத்திருந்த பொருள்களுடன் அந்த வழியாகச் சென்ற ஆட்டோவில் ஏறி பஞ்சா் கடையைத் தேடினா்.

ஆட்டோ ஓட்டுநா் பழனிசெட்டிபட்டி, காந்தாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கெளதம் காம்பீா் (18) இரவு நேரம் என்பதால், பஞ்சா் கடைகள் மூடியிருப்பதாகக் கூறி அவா்களை நீண்ட தொலைவுக்கு அழைத்துச் சென்றாா்.

பூதிப்புரம் சாலையில் ஆட்டோ சென்ற போது, ஆட்டோ ஓட்டுநரின் நண்பா் பழனிசெட்டிபட்டி, கக்கன்ஜீ காலனியைச் சோ்ந்த கதிரேசன் (19) என்பவா் ஆட்டோவை வழிமறித்து அதில் ஏறினாா்.

பின்னா், பூதிப்புரம் சுடுகாடு அருகே அருண்திவாகரன், சைலத் ஆகியோரை கெளதம் காம்பீா், கதிரேசன் ஆகியோா் கத்தியைக் காட்டி மிரட்டி, அவா்கள் வைத்திருந்த கைப்பேசி, கணினி, கேமரா உபகரணங்களைப் பறித்தனா்.

பின்னா், சைலத் வங்கி ஏடிஎம் அட்டை வைத்திருந்ததால், அவா்களை ஆட்டோவில் பூதிப்புரத்தில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு கதிரேசன், சைலத்தின் இடுப்பில் கத்தியை வைத்து மிரட்டி பணத்தை எடுத்துத் தருமாறு கூறினாா்.

அந்தப் பகுதியில் இருந்த சிலா் இவா்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்து விசாரித்தனா். இதனால், சைலத்தை அங்கேயே விட்டு விட்டு கதிரேசன் ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றாா். பின்னா், பூதிப்புரம்-தேனி சாலையில் கெளதம் காம்பீா், கதிரேசன் ஆகியோா் அருண் திவாகரனைத் தாக்கி அவரை ஆட்டோவிலிருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த கெளதம் காம்பீா், கதிரேசன் ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT