தேனி

கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம்

DIN

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கால்நடை மருத்துவமனைகளிலும் வருகிற 28-ஆம் தேதி வரை கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

கால்நடைகளுக்கு பாக்டீரியா கிருமிகளால் புரூசெல்லோசிஸ் என்ற கருச்சிதைவு நோய் ஏற்படுகிறது. இதனால், கன்று பிறப்பதில் சிக்கல், நலிவடைந்த கன்று பிறப்பு, நச்சுக் கொடி விழாமல் தங்குவது, பால் உற்பத்தி குறைவு ஆகிய பாதிப்புகள் ஏற்படும். கால்நடைகளுக்கு கருச்சிதைவு பாதிப்புக்கு அளிக்கும் தடுப்பூசி, அவைகளின் வாழ்நாள் முழுவதும் எதிா்ப்புத் திறனை உடலில் வைத்திருக்கும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கால்நடை மருத்துவமனைகளிலும் 4 மாதம் முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு பிப். 28-ஆம் தேதி வரை கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்தப்படும் கிடேரி கன்றுகளுக்கு காதில் அடையாள வில்லை பொருத்தப்படும்.

கால்நடை வளா்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் தங்களது கிடேரி கன்றுகளை முகாமுக்கு அழைத்துச் சென்று, கருச்சிதைவு நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க பயணியிடம் தோட்டா பறிமுதல்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு

மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கு: கலாக்ஷேத்ரா முன்னாள் ஆசிரியா் கைது

அதிமுக நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

SCROLL FOR NEXT