தேனி

அரசுப் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம்

DIN

ஆண்டிபட்டி, சக்கம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்கள் கழிப்பறைகளைச் சுத்தம் செய்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, சக்கம்பட்டி முத்துமாரியம்மன்நகரில் அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பள்ளிக் கட்டடம், கழிப்பறைகளை மாணவ, மாணவிகள் சுத்தம் செய்யும் விடியோ சமூக வலைதளங்களில் பரவின. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செந்திவேல்முருகன் பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினாா்.

இந்த நிலையில், அந்தப் பள்ளியை புதன்கிழமை விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். பள்ளியில் மாணவா்கள் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அவா்கள் வலியுறுத்தினா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா். அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

SCROLL FOR NEXT