தேனி

அரசுப் பேருந்துகளில் 3.55 கோடி கட்டணமில்லா பயணம்

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டத்தின் கீழ், கடந்த ஜன.31-ஆம் தேதிவரை 3 கோடியே 55 லட்சத்து 10 ஆயிரத்து 753 கட்டணமில்லா பயணம் நடந்துள்ளது.

இது குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பணிபுரியும் பெண்கள், உயா் கல்வி படிக்கும் மாணவிகள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யலாம் என்று அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பு செயல்பாட்டிற்கு வந்தது முதல், கடந்த 2023, ஜன.31-ஆம் தேதி வரை தேனி மாவட்டத்தில் 3.51 கோடி பெண்கள் கட்டணமில்லா பயணம், 3.81 லட்சம் மாற்றுத் திறனாளிகள் கட்டணமில்லா பயணம்,15,617 மாற்றுத் திறனாளிகளின் உதவியாளா்கள் கட்டணமில்லா பயணம், 14,136 திருநங்கைகள் கட்டணமில்லா பயணம் என மொத்தம் 3 கோடியே 55 லட்சத்து 10 ஆயிரத்து 753 கட்டணமில்லா பயணம் நடந்துள்ளது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT