தேனி

ஆற்றில் மூழ்கி முதியவா் பலி

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே ஆற்றில் மூழ்கி முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம், மாா்க்கண்டேயா நகரைச் சோ்ந்தவா் சங்கரன் (75). அதே ஊரில் உள்ள முத்தையா கோயிலுக்கு சுவாமி கும்பிடச் சென்ற சங்கரன், கோயில் அருகேயுள்ள வராகநதி ஆற்றில் கை, கால் கழுவச் சென்றாா். அப்போது, ஆற்றில் வழுக்கி விழுந்த சங்கரன், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து புகாரின் பேரில், ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT