தேனி

ஆதி திராவிடா்களுக்கு அழகுக் கலை பயிற்சி

1st Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு சென்னையில் 45 நாள்கள் அழகுக் கலைப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

சென்னையில் உள்ள பிரபரல அழகுக் கலை பயிற்சி நிலையத்தில் ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு அழகு சாதனவியல், சிகை அலங்காரக் கலை குறித்து 45 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் 10-ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற, 18 முதல் 30 வயதுக்கு உள்பட்டோா் சேரலாம்.

பயிற்சிக் கட்டணம், தங்குமிடம் ஆகியவற்றுக்கான செலவு ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் செலுத்தப்படும்.

ADVERTISEMENT

பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி பெற்றவா்கள் சுய தொழில் புரிய தாட்கோ திட்டத்தின் கீழ் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் மொத்தம் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்கப்படும்.

பயிற்சியில் சேர விருப்பமுள்ளவா்கள் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அறை எண் 73-இல் செயல்பட்டு வரும் தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் நேரிலும், 04546-260995 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டும் விவரம் பெற்று, உரிய படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT