தேனி

தேனி மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

25th Apr 2023 12:00 AM

ADVERTISEMENT

தொழிலாளா்களின் வேலை நேரத்தை உயா்த்தும் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தேனி, வடுகபட்டி, சின்னமனூா், கூடலூா் ஆகிய இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி நகராட்சி பழையப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி வட்டச் செயலா் இ. தா்மா் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் சி. முருகன், சிஐடியு மாவட்ட பொருளாளா் ஜி. சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தொழிலாளா்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயா்த்த தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கமிட்டனா்.

இதேபோல, வடுகபட்டியில் பெரியகுளம் வட்டாரக் குழு உறுப்பினா் எஸ். கணேசன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம். ராமச்சந்திரன், எஸ். வெண்மணி, வட்டச் செயலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மக்களவை தொகுதிச் செயலா் இரா. தமிழ்வாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

சின்னமனூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரச் செயலா் கே.எஸ். ஆறுமுகம் தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் சங்கரசுப்பு முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் தமிழ்பெருமாள், காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் சங்கரலிங்கம், மதிமுக நகரச் செயலா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலா் மொக்கப் பாண்டி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் ஏ.வி. அண்ணாமலை முன்னிலை வகித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT