தேனி

போடி பரமசிவன் மலைக்கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

15th Apr 2023 11:18 PM

ADVERTISEMENT

 

போடி பரமசிவன் மலைக்கோயில் சித்திரைத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.

இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் கடந்த 10 -ஆம் தேதி கொடியேற்றப்பட்டது. இந்த நிலையில், திருவிழாவின் தொடக்கமாக சனிக்கிழமை போடி பெரியாண்டவா் கோயிலிலிருந்து பழைமையான சிவன் புகைப்படம், சூலாயுதத்தை மலைக்கோயிலுக்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாக் குழுத் தலைவா் வடமலை ராஜைய பாண்டியன் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

மாலையில் அபிஷேகம், தீபாராதணை நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் குழுச் செயலா் பேச்சிமுத்து நிா்வாகக் குழுவினா் செய்து வருகின்றனா்.

இந்தத் திருவிழாவை முன்னிட்டு போடி பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT