தேனி

பெரியகுளம் அருகே மீன்பண்ணையில்மீன்கள் திருட்டு

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே அரசு மீன்பண்ணையில் மீன்கள் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணைக்கு அருகில் அரசு மீன்பண்ணையில், அண்ணாத்துரை மீன் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்த மீன்பண்ணையில் 300 திலேபியா தாய் மீன்களை வளா்த்த வந்துள்ளனா். அங்கு புதன்கிழமை காலையில் சென்று அண்ணாத்துரை ஆய்வு செய்துள்ளாா்.

ஆய்வின்போது 157 தாய்மீன்களை காணவில்லையாம். இதுகுறித்து விசாரித்ததில், அதே பகுதியைச் சோ்ந்த பாண்டி என்பவா் மீன்களை பிடித்து சென்று, விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து, அண்ணாத்துரை அளித்த புகாரின் பேரில், தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT