தேனி

பெரியகுளம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 பெரியகுளம் அருகே வியாழக்கிழமை மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தாா்.

பெரிகுளம் அருகே ஜெயமங்கலத்தைச் சோ்ந்தவா் விவசாயி கருப்பையா (51). இவா், வியாழக்கிழமை காலையில் ஜெயமங்கலம் பகுதியிலுள்ள தோட்டத்துக்கு, அவரது பெரியப்பா ராமனுடன் வேலைக்குச் சென்றிருந்தாா். அப்போது, தோட்டத்திலுள்ள மரத்தை கருப்பையா வெட்டிய போது அருகிலுள்ள மின்கம்பியில் சென்ற மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT