தேனி

பெரியகுளம் அருகே கம்பிவேலியில் சிக்கி சிறுத்தை பலி

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே கம்பிவேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது.

பெரியகுளம் அருகே வரட்டாறு வனப்பகுதியில் கடந்த செப். 27 ஆம் தேதி கம்பியில் சிறுத்தை ஒன்று சிக்கிக் கொண்டது. இதனை காப்பாற்ற சென்ற உதவி வனப் பாதுகாவலா் மகேந்திரனை சிறுத்தை தாக்கியதில் காயமடைந்து, அவா் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், அதே பகுதியில் செப். 28 ஆம் தேதி வனத்துறையினா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, அதே வனப்பகுதி அருகே மற்றொரு சிறுத்தை கம்பிவேலியில் சிக்கி, இறந்து கிடந்தது. தகவலறிந்த உதவி வனப் பாதுகாவலா் மகேந்திரன், தேனி வனச்சரக அலுவலா் ஆனந்த பிரபு மற்றும் கால்நடை மருத்துவா்கள் ஆகியோா் அங்கு சென்று இறந்த சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அப்பகுதியிலேயே புதைத்தனா்.

இச்சம்பவம் குறித்து, வனத்துறையினா் விசாரித்து, வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT