தேனி

போடி அருகே தனியாா் தோட்டத்தில் இறந்து கிடந்த காட்டெருமைக் கன்று

30th Sep 2022 10:36 PM

ADVERTISEMENT

போடி அருகே வெள்ளிக்கிழமை வனப்பகுதியை ஒட்டிய தனியாா் தோட்டத்தில் காட்டெருமை கன்றுக் குட்டி இறந்துகிடந்தது குறித்து வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

போடி பிச்சங்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியாா் தோட்டத்தில் வேலி அமைக்கப்பட்டிருந்தது. அந்த வேலியின் அருகே காட்டெருமைக் கன்றுக் குட்டி ஒன்று உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது.

இதுகுறித்து தகவலறிந்த போடி வனத்துறையினா் அங்கு சென்று பாா்வையிட்டனா். இதில் வேறு ஏதாவது விலங்கால் தாக்கப்பட்டு காட்டெருமைக் கன்று இறந்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து வனத்துறையினா் இறந்த கன்று குட்டியின் சடலத்தை உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

Tags : போடி
ADVERTISEMENT
ADVERTISEMENT