தேனி

உத்தமபாளையம் அருகே தூா்வாரப்படாத குளங்களில் துா்நாற்றம்: விவசாயிகள் புகாா்

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பல ஆண்டுகளாக குளங்கள் தூா்வாரப்படாததால் துா்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள், விவசாயிகள் தெரிவித்தனா்.

முல்லைப் பெரியாற்றிலிருந்து கால்வாய் வழியாக வரும் பாசன நீா் கோகிலாபுரத்தில் உள்ள தாமரைக்குளம், ஆணைமலையன்பட்டி குளம், சின்னமனூா் கருங்கட்டான்குளம் உள்ளிட்ட குளங்களில் தேக்கி வைத்து விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த குளங்கள் கடந்த 30 ஆண்டுக்கும் மேலமாக தூா்வாரப்படாத நிலையில் மண் மேடுகளாக மாறியதோடு, அதிகமாக வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளால் தண்ணீா் அசுத்தமாக மாறி துா்நாற்றம் வீசுவதாகப் புகாா் எழுந்துள்ளது. மேலும் மீன்பிடித் தொழிலும் முடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறியது: கடந்த காலங்களில் இக்குளங்களில் சமத்துவத்தை போற்றும் வகையில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. ஜூன், ஜூலை மாதங்களில் குளத்திலிருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் கொக்கு, நாரை உள்ளிட்ட பறவைகளின் வசிப்பிடமாக இருந்தன. ஆனால், தற்போது இந்த குளங்கள் ஆகாயத் தாமரைச் செடிகள் வளா்க்கும் இடமாக மாறியுள்ளன. குளங்களின் நீா்ப் பிடிப்பு பரப்பு குறைந்து விட்டது. 50 முதல் 60 சதவீத ஏக்கா் பரப்பளவு குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தென்னை மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. ஆக்கிமிரமிப்பு நீா் நிலைகளை உடனடியாக மீட்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உத்தமபாளையம் வட்டாரத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் வரும் குளங்களை முழுமையாகத் தூா்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற தேனி மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: யோகி ஆதித்யநாத்

மே மாத பலன்கள்: துலாம்

மே மாத பலன்கள்: கன்னி

ஹைதராபாத்தில் 4 லட்சம் தெரு நாய்கள்: மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

மே மாத பலன்கள்: சிம்மம்

SCROLL FOR NEXT