தேனி

பண்ணைப்புரத்தில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து இரு குழந்தைகள் பலி

29th Sep 2022 07:46 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரம் பேரூராட்சி சுகாதார வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் பாவலர் தெருவை சேர்ந்த ஈஸ்வரன் மகள் நிதிகா ஸ்ரீ (7) மற்றும் மேற்கு தெரு ஜெகதீஷ் மகள் சுபஸ்ரீ (6). இருவரும் அங்குள்ள இந்து நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த வந்தனர்.

இதையும் படிக்க | 10 ஆண்டுகளில் 1733 சூழலியல் ஆர்வலர்கள் கொலை: கவலையளிக்கும் ஆய்வு முடிவுகள்

பள்ளி தோழிகளான இருவரும் பள்ளி முடிந்து விட்டு அருகே உள்ள பண்ணைபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான பெண்கள் சுகாதார வளாகம் அருகே உள்ள கழிவு நீர் தொட்டி மேல் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கழிவுநீர் தொட்டி இடிந்ததில் தொட்டிக்குள் விழுந்து சிறுமிகள் இருவரும் பரிதாபமாக மூச்சு திணறி உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட தம்பதி

இதனைத் தொடர்ந்து கழிவுநீர் தொட்டியை முறையாகப் பராமரிக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோம்பை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT