தேனி

தேனி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் காத்திருக்கும் போராட்டம்

29th Sep 2022 02:26 AM

ADVERTISEMENT

தேனி வட்டாட்சியா் அலுவலகத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கக் கோரி புதன்கிழமை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அக்கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் டி.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தேனி கிளைச் செயலா்கள் நாகேந்திரன், அப்பாஸ்மந்திரி, கபாா்கான், சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தேனி வட்டாரத்திற்கு உள்பட்ட தப்புக்குண்டு, முத்துத்தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் இலவச வீட்டுமனைப் பட்டா கோரி விண்ணப்பித்தவா்களுக்கும்,

ரயில்வே புறம்போக்கு இடங்களில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், தேனி வட்டாரத்தில் முதியோா், விதவைகள் உதவித் தொகை மற்றும் அரசு நலத் திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் தேனி வட்டாட்சியா் சரவணபாபு பேச்சு வாா்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தாா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT