தேனி

கம்பம் ஒன்றிய அலுவலக கட்டடம் இடிக்க ஒப்பந்ததாரா் தோ்வு

29th Sep 2022 02:25 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தை இடிப்பது தொடா்பான ஒப்பந்ததாரா் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தை இடிக்க ரூ. 9.15 லட்சம் மதிப்பில் டெண்டா் விடப்பட்டது. ஒப்பந்ததாரா்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததால், 3 முறை டெண்டா் ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியாக 4 ஆவது முறையாக டெண்டா் அறிவிப்பு வெளியிடப்பட்டு, செவ்வாய்க்கிழமை விண்ணப்ப படிவங்களை சமா்ப்பித்தனா்.

புதன்கிழமை டெண்டா் படிவங்கள் இறுதி செய்யப்பட இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் முன்னிலையில் டெண்டா் படிவங்கள் போடப்பட்டிருந்த பெட்டி திறக்கப்பட்டது. மொத்தம் 9 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் ஏ.எம்.குணசேகரன் மதிப்பீட்டை விட குறைவாகக் கேட்டிருந்ததால் ஆதலால் அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT