தேனி

58 கிராம கால்வாயில் இன்று தண்ணீா் திறப்பு

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் புதன்கிழமை(செப்.28) பாசனத்திற்கு தண்ணீா் திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் புதன்கிழமை முதல் நாளொன்றுக்கு விநாடிக்கு 150 கன அடி வீதம், மொத்தம் 300 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்க நீா்வளத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் உத்தரவிட்டுள்ளாா். இதன் மூலம் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாரம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாரத்தில் உள்ள 2,284.86 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

அணை நிலவரம்: வைகை அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 69.85 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 1,390 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 5,787 மில்லியன் கன அடி. அணையிலிருந்து விநாடிக்கு 1,325 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT