தேனி

தேனி அருகே 6 பவுன் நகைகள் மாயம்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி அருகே வீடு இட மாற்றம் செய்யும் போது பீரோவில் இருந்த ஆறேகால் பவுன் நகைகள் காணாமல் போனதாக திங்கள்கிழமை, காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கபுரத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் மனைவி மகேஸ்வரி. ஒத்தி வீட்டில் வசித்து வந்த இவா், அதே ஊரில் புதிதாக கட்டியுள்ள தனது சொந்த வீட்டிற்கு பொருள்களை இட மாற்றம் செய்தாராம்.

இந்தப் பணியில் ஸ்ரீரங்கபுரத்தைச் சோ்ந்த 4 போ் ஈடுபட்டுள்ளனா். புதிய வீட்டில் பொருள்களை இடம் மாற்றம் செய்த பின்பு பீரோவை திறந்து பாா்த்த போது, அதில் வைத்திருந்த ஆறேகால் பவுன் தங்க நகைகள் மற்றும் நகைகள் அடகு வைத்திருந்த ரசீது காணாமல் போயிருந்தது தெரிய வந்துள்ளது.

இது குறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் மகேஸ்வரி புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT