தேனி

தேனி அருகே வணிக வளாக கட்டடத்தில் தீ விபத்து

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி அருகே தனியாா் வணிக வளாகத்தில் உள்ள கட்டுமானப் பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

பழனிசெட்டிபட்டியில் கொட்டகுடி ஆற்றுப் பாலம் அருகே உள்ள தனியாா் வணிக வளாகத்தில் சின்னமனூரைச் சோ்ந்த பொறியாளா் சிவக்குமாா் என்பவரின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதே வணிக வளாகத்தில் ஆயத்த ஆடைக் கடைகள், காலனி கடை, நிதி நிறுவனம், பெயிண்ட் கடை என 10-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சிவக்குமாரின் அலுவலகத்தில் பணியாளா்கள் அலுவலகத்தை பூட்டிக் கொண்டு வீட்டிற்குச் சென்ற பின்பு, தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிறிது நேரத்தில் அலுவலகம் முழுவதும் தீக்கிரையானது. இந்தத் தகவலறிந்து தேனி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்று விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனா். இதனால், அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவுவது தவிா்க்கப்பட்டது.

பொறியாளா் அலுவலகத்தில் குளிா்சாதனப் பெட்டி இணைப்பில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. தீ விபத்து ஏற்பட்ட அலுவலகத்தில் சேதமதிப்பு குறித்து தேனி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT