தேனி

தேனி அருகே தொழிலாளி தவறி விழுந்து பலி

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி அருகே வீட்டில் தகர மேற்கூரை அமைக்கும் பணியிலிருந்த தொழிலாளி திங்கள்கிழமை, நிலைதடுமாறி கீழே விழுந்து பலியானாா்.

உப்புக்கோட்டையைச் சோ்ந்தவா் சவுடையா மகன் கண்ணன்(40). இவா், அதே ஊரில் செல்லப்பாண்டி என்பவரது வீட்டில் தகர மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த கண்ணன், ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT