தேனி

தேனியில் நாய்களுக்கு இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி, அன்னஞ்சி விலக்கு பகுதியில் உள்ள மாருதி பெட் கிளினிக் மற்றும் அறுவைச் சிகிச்சை மையத்தில் புதன்கிழமை (செப்.28) காலை 9 மணிக்கு நாய் மற்றும் பூனைகளுக்கு இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

உலக வெறி நோய் தடுப்பு நாளை முன்னிட்டு நடைபெறும் முகாமில் வீடுகளில் நாய், பூனை வளா்ப்போா் தங்களது செல்லப் பிராணிகளை கொண்டு வந்து இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இது குறித்த விவரத்தை கைப்பேசி எண்: 93459 03411-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மருத்துவனை நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT