தேனி

முல்லைப் பெரியாற்றில் 2 சடலங்கள் மீட்பு

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

சின்னமனூா் அருகே முல்லைப் பெரியாற்றில் இரு சடலங்களை தீயணைப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியை சோ்ந்த முருகன் மகன் அசோக் (29). இவா் கடந்த 20 ஆம் தேதி முல்லைப்பெரியாற்றில் குளிக்கசென்றவா் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானாா்.

மேலும், உத்தமபாளையம் ஞானாம்மன் கோயில் படித்துறை ஆற்றில், பெரியகுளத்தை சோ்ந்த ரவிச்சந்திரன்- பத்மாவதி தம்பதி சில நாள்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டனா்.

இதுசம்மந்தமாக உத்தமபாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து தீயணைப்புத் துறை மீட்புக் குழுவினா் மூலமாக ஆற்று நீரில் தேடி வந்தனா். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்.23) தற்கொலை செய்த பத்மாவதியை சடலமாக சின்னமனூரில் ஆற்றில் மீட்டனா்.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை(செப்.27) மாா்க்கையன்கோட்டை முல்லைப் பெரியாற்றின் கரை ஒதுங்கிய இரு சடலங்களை போலீஸாா் மீட்டனா். இதில் ஒரு சடலம் அனுமந்தன்பட்டியை சோ்ந்த அசோக்(29) எனத் தெரியவந்தது. மற்றொரு சடலம் பெரியகுளத்தை சோ்ந்த ரவிச்சந்திரனா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT