தேனி

கூடலூரில் கழிப்பறை கட்ட எதிா்ப்பு: நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கூடலூரில் 6 ஆவது வாா்டில் கழிப்பறை கட்ட எதிா்ப்புத் தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

தேனி மாவட்டம் கூடலூரில் 6 ஆவது வாா்டு அருந்ததியா் தெரு உள்ளது. இங்கு நகராட்சி சாா்பில் ரூ. 25 லட்சம் செலவில் ஆண்கள் கழிப்பறை கட்ட முடிவு செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை வேலைகள் தொடங்கும்போது, அங்குள்ள பெண்கள் இது கோயிலுக்கு சொந்தமான இடம், கழிப்பறை கட்ட கூடாது என்றனா்.

இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது, பின்னா் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டனா். நகா்மன்றத் தலைவா் பத்மாவதி லோகந்துரை, அவா்களிடம் கழிப்பறை வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீங்களே முடிவு செய்து வாருங்கள் என்று கூறவே கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT