தேனி

தேவிகுளம், பீா்மேடு பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க கிராமசபைக் கூட்டங்களில் தீா்மானம்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தேவிகுளம் பீா்மேடு, உடும்பஞ்சோலை பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க கிராம சபைக் கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாரதிய கிஷான் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீா் மற்றும் பாசனத் தேவைகளை பூா்த்தி செய்வது முல்லைப் பெரியாறு அணை. அணையில் 152 அடி தண்ணீரைத் தேக்க விடாமல் கேரள அரசு இடையூறு செய்து வருகிறது. இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வெளியாட்டம் என்ற ஊராட்சியில் முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தமிழக விவசாயிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள

தேவிகுளம், பீா்மேடு, உடுமஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்கள் தற்போது கேரளத்தில் உள்ளது. இவற்றை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என வரும் அக்டோபா் 2 இல் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளிலும் தீா்மானம் நிறைவேற்றி, பிரதமா், குடியரசுத் தலைவா், தமிழக முதல்வா் உள்ளிட்டோருக்கு அனுப்ப வேண்டும் என்று பாரதிய கிஷான் சங்க மாவட்டத் தலைவா் எம்.சதீஷ்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறை தீா்க்கும் முகாமில் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT