தேனி

வீரபாண்டி, ராசிங்காபுரம்,வைகை அணையில் நாளை மின் தடை

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

வீரபாண்டி, ராசிங்காபுரம், வைகை அணை துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை(செப்.29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி, ராசிங்காபுரம், சிலமலை, டி.ரங்கநாதபுரம், சங்கராபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்துள்ளாா்.

வைகை அணையில் மின்தடை: பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வைகை அணை துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (செப்.29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் வைகை அணை, ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகைபுதூா், ஜம்புலிபுத்தூா், மருகால்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT