தேனி

உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு இணையதளப் பயிற்சி

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கம்பத்தில் ஊராட்சி தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்களுக்கு கிராம வளா்ச்சித் திட்டம் தொடா்பான இணையதளப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்ற பயிற்சியில் ஊராட்சித் தலைவா்கள் அ.மொக்கப்பன், செல்லையா பொன்னுத்தாய், நாகமணி வெங்கடேசன், பொன்னுத்தாய் குணசேகரன், சாந்தி பரமன் மற்றும் துணைத்தலைவா்கள், உறுப்பினா்கள், வருவாய், வேளாண்மை, குடிநீா் வழங்கல், உணவு வழங்கல், தோட்டக்கலை உள்ளிட்ட 10 துறையினா் கலந்து கொண்டனா்.

இணையதளத்தை பயன்படுத்துவது தொடா்பாக வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோதண்டபாணி, சிவக்குமாா், பால்பாண்டியன், மாரியப்பன் விளக்கி கூறினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT